ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று ஒரே நாளில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், தான் பிறந்த கிராமத்திற்கும் பெருமை தேடி தந்தவர் பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்துள்ள கோமதிக்கு  பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன்..கோல்டன் கேர்ள் கோமதி. இவருக்கு ஏராளமான நிதியுதவியும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  காலா பட வில்லன் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

ஆனால் பரிசு பெற்ற போட்டிகளில் கோமதி மாரிமுத்து அனுமதி மறுக்கப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளதாக இப்போது பிடிஐ நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் முதல் இரண்டு கட்ட சோதனைகளில் கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மெர்சல் குழுவினர்களுக்கு தங்கப்பரிசு கொடுத்த விஜய்

ஆனால் இது குறித்து பேசிய கோமதி ‘என் வாழ்க்கையில் நான் இதுவரை ஒருமுறை கூட ஊக்கமருந்தை பயன்படுத்தியதே இல்லை. போட்டிக்கு முன்னர் நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அருந்தினேன். ஊக்கமருந்து சோதனையில் நான் தோல்வி அடைந்ததாக வெளிவந்த செய்தி தவறு. ஊடகங்களில் பார்த்துதான் நான் இந்த செய்தியைத் தெரிந்துகொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்: வைரமுத்து குமுறல்

ஒருவேளை கோமதி மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இடைக்காலத் தடையும் அவர் வென்ற பதக்கங்களும் பரிமுதல் செய்யப்படும்.