கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்தது விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படம். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. ராஜ்கிரணும் தன் பங்குக்கு சிறப்பான ஆக்‌ஷன் அப்பாவாக அனல் கக்கும் சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தார்.

இப்படத்தை இரண்டாம் பாகமாக மீண்டும் எடுத்துவரும் லிங்குசாமி படத்தின் ரிலீஸ் தேதியினை வரும் அக்டோபர் 18ம்தேதி என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யுடு படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷ் நடித்த மஹாநடி படத்தின் வெற்றி உள்ளிட்டவையால் இருவரும் இணைந்து நடித்த இப்படமும் நல்ல விலைக்கு போய் உள்ளதாம்.

சிரஞ்சீவி நடித்த தாகூர் படத்தயாரிப்பாளர் தாகூர் மது இந்த படத்தை தெலுங்கில் வாங்கி வெளியிடுகிறாராம்.