கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களை கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தையில் விற்பனை செய்து வருகிறது

ஐபோன், ஸியோமி மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தங்களது பிக்சல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இளைஞர்களிடம் கூகுள் நிறுவனப் போன்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ள நிலையில் அதன் அடுத்த வெர்ஷன்களான 3A மற்றூம் 3A XL ஆகிய புதிய மாடல்கள் இப்போது அறிமுகமாக இருக்கின்றனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் இந்த இரு மாடல்களையும் அதன் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தினார். அதிநவீன வசதிகள் கொண்டுள்ள இந்த போன்கள் விரைவில் இந்திய சந்தைக்கு வர இருக்கின்றன. கூகுள் 3A போன் 39,999 ரூபாய்க்கும் 3A XL போன் 44,999 ரூபாய்க்கும் விற்கப்பட இருக்கின்றன. இந்த மாடல்கள் வரும் மே 15 முதல் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.