Gopi nainar

நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பட,ம் அறம். கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளது என்றும். இதற்கான வேலைகளில் இயக்குனர் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கோபி நைனார் அடுத்து ஆர்யாவை இயக்க உள்ளார். வட சென்னையை மையப்படுத்தி தயாராகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்திற்கு பின்பே அறம் 2 பட வேலைகள் துவங்க உள்ளதாகவும் தெரிகிறது.