தமிழகத்தை சேர்ந்த பிரபலமான புஷ்பம் போன்ற பெண் விஐபிக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் புருஷனை புரட்டி எடுத்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் புஷ்பம் போன்ற அந்த பெண் விஐபி தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு விஐபிஐ திடீரென திருமணம் செய்தார். இந்த திருமணத்துக்கு இரண்டாவது கணவரின் மனைவி தடையாக இருந்ததால் சர்ச்சை வெடித்தது. ஆனால் சர்ச்சையையும் மீறி அவரை கரம் பிடித்த பெண் விஐபிக்கு ஓரிரு மாதங்களிலேயே மணவாழ்க்கை கசந்துவிட்டதாம்.

வீட்டுக்கு எதிரே இருந்த தோட்டத்தில் கடந்த வாரம் வாக்கிங் போனபோது, இந்த விஐபி தம்பதிக்குள் காரசார வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் புஷ்பமான விஐபி மனைவி, புருஷனை புரட்டி எடுத்துவிட்டாராம். புருஷன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த பெண் விஐபி குறித்து ஏற்கனவே பல கிசுகிசுக்கள் உலாவந்தது குறிப்பிடத்தக்கது.