டைரக்டர் ராஜாதுரை இயக்கதில் கெளதம் கார்த்திக் நடிக்கும் படம் முத்துராமலிங்கம். இந்த படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த் உள்ளனர்.

இந்த படம் இளையராஜா இசையில் நாளை வெளியாக உள்ளது.மேலும் இந்த படத்தில் இப்படத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நெப்போலியனுக்கு மகனாக நடித்துள்ளார்.இப்படம் சிலம்பாட்ட கலையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

நெப்போலியனுக்கு ஏற்கனவே சிலம்பாட்ட அனுபவம் உள்ளத்தால் எளிதாக நடித்துள்ளார்.இந்த படத்திற்காக கெளதம் கார்த்திக் 40 நாட்கள் முறைப்படி சிலம்பாட்ட பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் சிலம்பாட்டம் தொடர்பாக எட்டு சண்டை காட்சிகள் உள்ளதாம்.