கௌதமிக்கும் வித்யா பாலனுக்கும் உள்ள ஒற்றுமை

மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்களாக நடிகை கவுதமியும் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனும் நியமனமாகியுள்ளனர். பஹலாஜ் நிஹலானி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அவரை சமீபத்தில் பதவி நீக்கியது. தற்போது இந்த வாரியத்தின் புதிய தலைவராக பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை கௌதமியும், வித்யா பாலனும் தங்களுக்குச் சரியென்று நினைக்கும் கருத்துகளை வெளிப்படுத்துவதிலும், அதன் படி நடப்பதிலும் தனித்துவமானவர்கள். அவர்களைத் தணிக்கைக் குழுவின் முக்கிய பொறுப்பில் அமர்த்தியுள்ளது சரியான முடிவு தான் என்று திரை வட்டாரங்கள் ஆமோதிக்கின்றன. இவர்களின் இந்த புதிய பாதை வெற்றிபெற வாழ்த்துகள். இனி நல்ல படங்களை எதிர்பார்ககலாம். அது சரி, கமல் படங்களுக்கு கெடுபிடி அதிகரிக்குமோ?? நெட்டிசன்கள் மத்தியில் இப்படியும் ஒரு பேச்சு உலா வருவதை மறுக்க முடியல.