Connect with us

செய்திகள்

மறைந்த கிரேஸி மோகன் உடல் தகனம்…

Published

on

Grazy Mohan – மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகத்தர்தாவுமான கிரேஸி மோகனின் உடல் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.

நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 1952ல் பிறந்த அவருக்கு தற்போது 66 வயதாகிறது. நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் அவரின் உ டல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிவகார்த்திகேயன், சிவகுமார், பாண்டியராஜன், சிவக்குமார், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அவரின் உடல் இன்று காலை சென்னை பெசண்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம செய்யப்பட்டது. குடும்ப வழக்கப்படி அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. அப்போது, அவரின் உறவினர்களும் நடிகர் கமல்ஹாசனும் உடன் இருந்தனர்.

CineReporter is No. 1 online news website.

Trending