Connect with us

செய்திகள்

கிரேஸி மோகன் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Published

on

சினிமா மற்றும் நாடக நடிகரும், புகழ் பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.

நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 1952ல் பிறந்த அவருக்கு தற்போது 66 வயதாகிறது. நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார்.

கமல்ஹாசன் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் சதிலீலாவதி, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் ஆவார். அதேபோல், கமல் நடிக்கும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.

அவரின் மரணம் நாடக மற்றும் சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CineReporter is No. 1 online news website.

Trending