ரஜினி, கமல், அஜித், விஜய் நினைத்தால் தமிழ்நாடையே மாற்றலாம்

இன்றைக்கு கோலிவுட்டில் பெரிய நடிகர்கள் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய் என்ற இந்த நான்கு நடிகர்களை கூறலாம். இந்த நான்கு நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கண்ட இந்த நான்கு நடிகர்களும் தங்கள் ரசிகர்களை சரியான வழியில் வழிநடத்தினால் தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலரும் க்ரீன் கலாம் அமைப்பை தோற்றுவித்தவருமான அப்துல் கானி என்பவர் கூறியுள்ளார். இவர் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தங்களுடைய ஒவ்வொரு ரசிகர்களும் ஒரு மரத்தை நட்டு தங்களுக்கு புகைப்படம் அனுப்ப வேண்டும் என்றும் அவ்வாறு புகைப்படங்கள் அனுப்புபவர்களுடன் போட்டோ எடுத்து கொள்வேன் என்று அறிவித்தால் தமிழகத்தில் ஏகப்பட்ட மரங்கள் நடப்பட்டு ஒருசில ஆண்டுகளில் தமிழகமே பசுமையாக காணப்படும் என்றும் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.