கன்னியாகுமரி மாவட்டத்தில் மனமேடையில் நின்ற மணப்பெண் மயக்கமடைந்து விழுந்த சம்பவம் அனைவரையும் பரபரப்பாக்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியில் உள்ள சி எஸ் ஐ சர்ச்சில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் ஒன்று நடந்துள்ளது. அப்போது மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை வாக்களிக்கும் சடங்கின் போது பாதிரியார் மணப்பெண்ணிடம் இந்த திருமணத்துக்கு சம்மதமா எனக் கேட்க பதில் சொல்லாத அந்தபெண் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைப் பார்த்து பதறிய உறவினர்கள் மற்றும் பெற்றோர் உடனடியாக மருத்துவரை அழைத்து வந்து பார்த்துள்ளனர். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் சாதாரண மயக்கம்தான் எனக் கூறி திருமணத்தை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால் மணப்பெண் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறி அழுதுள்ளார்.

இதனால் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தனியாகப் பேசி கல்யாணத்தை நிறுத்துவதாக முடிவு எடுத்தனர். அதன் பின்னர் கல்யாணம் நிறுத்தப்பட்டது.