mahesh babu

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு சொந்தமான திரையரங்கில் ஜி.எஸ்.டி நடைமுறைகளை மீறியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர சினிமா உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் மகேஷ்பாபு. இவர் சமீபத்தில் கச்சி பவுலி என்ற இடத்தில் 7 திரையரங்குகள் கொண்ட கட்டிடத்தை திறந்தார்.

இந்த தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ.200 மற்றும் 300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அமுலுக்கு பின் நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்பட்டன. ஆனால், மகேஷ்பாபுவுக்கு சொந்தமான இந்த திரையரங்குகளில் டிக்கெட் விலை குறைக்கப்படவில்லை. இதன்படி மாதம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி அதிகாரிகள் மகேஷ்பாபுவின் திரையரங்கில் சோதனை நடத்தினர். அதன்பின், ஜி.எஸ்.டி நடைமுறைகளை மீறியதாக விளக்கம் கேட்ட மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.