குஜராத்தில் செஜல் ஷா என்பவர் வெயிலின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக தனது கார் முழுவதையும் மாட்டு சாணத்தால் பூசி மொழுகியுள்ளார்.

இந்தியா முழுவதும் கோடையின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் பல நூதனமான வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோல ஒரு நூதன் வழியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நபர் தனது காரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கையாண்டுள்ளார். அவர் தனது காரை சுற்றிலும் மாட்டு சாணத்தால் மொழுகி அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தனது வாகனத்தில் வெப்பத்தைக் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த பலரும் ஆச்சர்யம் அடைந்தாலும் இந்த வழி முறை உண்மையாகவே பலன் தருமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் வெப்பம் குறைந்தாலும் துர்நாற்றம் வீசுமே எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.