கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா தொடர்ந்து பாரதிராஜாவின் சில படங்களில் நடித்திருப்பார், தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் என்பதால் அவரின் புகழ்பெற்ற முதல் மரியாதை படத்தில் கூட கதாநாயகி ராதா பேசும் வசனங்களுக்கு இவர்தான் டப்பிங் பேசி இருப்பார்.

ஹிந்து மத சடங்குகளில் ஒன்று குரு பெளர்ணமி அதாவது ஆடிமாதம் வரும் பெளர்னமியை குரு பெளர்ணமியாக அழைக்கிறார்கள். தனக்கு பாடம் கற்று கொடுத்த குருவாக இருந்தாலும், பாடல் கற்று கொடுத்தவராக இருந்தாலும்,, இயக்குனராக இருந்தாலும் தனக்கு தத்துவங்களை போதித்த மகானாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், அவர்களை குரு பெளர்ணமி அன்று வணங்க வேண்டும் அவர்களை நினைவு கூற வேண்டும் அவர்களிடம் அன்று ஆசிர்வாதம் வாங்கினால் நமது வாழ்வு வளப்படும் என்பது விதி.

இதையும் படிங்க பாஸ்-  கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? சரத்குமார்

கடந்த வெள்ளியன்று குரு பெளர்ணமி கொண்டாடப்பட்டது.

நடிகை ராதிகாவும் அந்த வகையில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி நடிப்பு சொல்லி கொடுத்து ஒரு நடிகையாக வளர்ந்து இன்று மிகப்பெரும் தயாரிப்பாளராக விளங்குவதற்கு காரணமாக இருக்கும் பாரதிராஜாவை நினைவு கூறும் விதமாக குரு பெளர்ணமி என்று மரியாதை செலுத்தும் வகையில் அவரை நினைவு கூர்ந்து அவரை சந்தித்த இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  25 வருட இடைவேளைக்கு பிறகு தினேசுடன் கூட்டணி சேரும் வெற்றி இயக்குனரின் நிறுவனம்

https://twitter.com/realradikaa/status/1022709728575516672