ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர்’ என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய குருசோமந்தரத்தை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் இவர் தற்போது கேங்ஸ்டர் கேரக்டரில் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை மனோஜ் பீதா என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் கதாசிரியர் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுமுகம் சிபி கதாநாயகனாகவும் , அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகிய இருவரும் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கும் இந்த படத்தில் சாந்தினி, அழகம்பெருமாள், ஜான் விஜய், வாசுவிக்ரம், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.