தான் கமல் படங்களில் பணியாற்றியதற்கான ஊதியத்தை இதுவரை தனக்கு வழங்கவில்லை என நடிகை கௌதமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளமல் இணைந்து வாழ்ந்து வந்த நடிகர் கமல்ஹாசனும்,கௌதமியும் பிரிந்தனர் என்பது நமக்கு தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை கௌதமி கமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது வலைபக்கத்தில் கூறியபோது,

 

கமல்ஹாசனும் நானும் கடந்த 2016ம் ஆண்டு பிறிந்தோம். ஆனால் அதற்கு முன்பு நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய் தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட அவரது சில படங்களுக்குரிய சம்பள பாக்கியை இன்னும் எனக்கு வழங்கவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கமல் மற்றும் ராஜ் கமல் பிலிம் இண்டர் நேசனல் நிறுவனத்திடமிருந்து பல முறை முயன்றும் எவ்வித பலனும் இல்லை.

மேலும் கமலுடனான பிரிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இனி அவருடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழில் சார்ந்தோ இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்று கூறினார்.