பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்துவிட்டனர். ஆனால் இதுவரை திரையுலகில் உள்ளவர்கள் யாரும் இதுகுறித்து வாயை திறக்கவில்லை. கமல், குஷ்பு போன்றவர்கள் அரசியலில் இருப்பதால் அவர்களை திரையுலகினர் என்று மட்டும் சொல்ல முடியாது.

இந்த நிலையில் அவ்வபோது சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது டுவிடடரில் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியாதாவது:

பெண்ணடிமையை சாதியை மூட நம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார்.! அவரின் சிலைகள் அப்புறப்படுத்தபடும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது..! என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.