கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை,வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டு மிகுந்த சேதமடைந்துள்ளது. மனிதர்கள், மான்கள் என அனைவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் துயர நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

கடவுளின் சொந்த ஊர் என அழைக்கப்படும் கேரளாவில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதை எண்ணி இந்திய மக்கள் அனைவரும் வருத்தமடைந்துள்ளனர்.

குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மற்றும் கொல்லம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கடந்த 48 மணி நேரத்தில் 26பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது

இந்நிலையில் மக்களுக்கு உதவும் விதமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்வதற்கு ஹெல்ப்லைன் நம்பர்களை பகிர்ந்துள்ளார் ஜிவி பிரகாஷ்