Home சற்றுமுன் ஒரே நேரத்தில் 11 படங்களில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்

ஒரே நேரத்தில் 11 படங்களில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்

தமிழ்த்திரையுலகில் ஒரே நேரத்தில் பத்து படங்கள் நடித்து வரும் ஒரே நாயகன் ஜிவி பிரகாஷ்தான். இவர் தற்போது செம, 4G, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தலமயம்’, ரெட்டை கொம்பு, கருப்பு நகரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என ஒரே நேரத்தில் பத்து படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள 11வது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ‘அங்காடித்தெரு, அரவான், உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் பீரியட் படம் என்றும், ஜிவி பிரகாஷூக்கு வித்தியாசமான வேடம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் ராம், மற்றும் இயக்குனர் கோபி நயினார் ஆகியோர்கள் இயக்கும் படங்களிலும் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.