பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் காத்து என்ற கேரக்டரில் நடித்த ஜிவி பிரகாஷூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் தற்போது அறம் இயக்குனர் கோபிநயினார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வடசென்னை பின்னணியில் கிரிக்கெட் வீரராக ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார். ‘அறம்’ படம் போலவே உணர்ச்சி மிகுந்த காட்சிகள் இந்த படத்திலும் அதிகம் இருக்குமாம்

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.