GV Prakash Kumar’s Kuppathu Raja : டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.

மேலும், இயக்குநர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘S ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.

தற்போது, படத்தின் ட்ரெய்லரை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். படத்தை ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.