பண்டிகையின் ஸ்பெஷலாக எப்பொழுதுமே பாக்ஸ் ஆபிஸீக்கு நல்ல தொடக்கத்தை உறுதிப்படுத்துவதோடு, அதற்கு மக்களின் ஆதரவும் இருக்கும். அந்த வகையில் இந்த வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘சர்கார்’ திரைப்படம் நாளை (நவ.6) வெளியாக உள்ளது.

‘தல’ அஜித்தின் நடிப்பில், சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம் தயாரித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில், கோலிவுட்டின் சமீபத்திய முடிவின்படி ‘விஸ்வாசம்’ படம் தனியாக ரிலீசாக போவதில்லை.

ஆமாம், இதிலிருந்து தெரியவந்தது, இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘வாட்சமேன்’ திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. தற்போது, வெளிவந்துள்ள இப்படத்திற்கான போஸ்டரில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய ‘பேட்ட’ படமும பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக வதந்தி பரவியுள்ளது. எனினும் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.