தேர்தலில் தோற்றாலும் ஹெச் ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இந்தியா முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக மட்டும் மொத்தமாக 303 தொகுதிகளைப் பெற்று தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆனாலும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் உள்ளது தமிழக பாஜக. அதற்கு மிக முக்கியக் காரணம் தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளது பாஜக.

இதையும் படிங்க பாஸ்-  மன்சூர் அலிகான் என்ன ஆனார்? - அவருக்கு எத்தனை ஓட்டு?

ஆனாலும் தமிழகத்தில் உள்ள பாஜகவினரை மகிழ்விக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர்  அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கிறதாம் பாஜக தலைமை.