hafiz syed threaten modi :

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் ‘நீரை தடுத்தால் பிரதமர் மோடியின் மூச்சை நிறுத்துவேன்’ என தீவிரவாத தலைவர் ஹபீஸ் சய்யீத் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ பாகிஸ்தானில் வேகமாக பரவிவருகிறது.

இந்தியாவில் முழுமையாகப் பயன்படுத்தாத உபரி நீர் ஜீலம், சீனாப், ராபி, பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் ஆகிய 5 நதிகளின் வழியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லும் உபரிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் என பலர்கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்த கோரிக்கை வலுப்பெற்றது. இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, காஷ்மீரில் மூன்று அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுப்போம். இதில் பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் நதிகளின் நீரை யமுனை நதிக்கு திருப்பி விடுவோம் என்றார். இதை கேட்டு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் கடும் கோபத்தில் இருக்கின்றன.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில்முக்கியமான தீவிரவாத அமைப்பான ‘ஜமாத்-உத்-தாவா’வின் தலைவரான ஹபீஸ் சய்யீதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் சய்யீத் தனது பேச்சில், ‘நீ பாகிஸ்தானுக்கு வரும் நீரை நிறுத்துவாயா? காஷ்மீரில் அணைகட்டி நீரைத் தேக்குவாயா? அதை எங்களுக்கு இல்லாமல் செய்வாயா? எல்லை மீறி நீ பேசிவிட்டு அதற்கு நாம் பதிலளிக்காமல் மவுனம் காக்க வேண்டும் என விரும்புகிறாயா? நீ நீர்வரத்தை தடுத்தால் நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.