எங்கப்பா படத்துல நடிக்க கூடாது. ரஜினிக்கு மிரட்டல் விடுத்த மும்பை தாதா மகன்

12:38 மணி

‘கபாலி’ வெற்றியை அடுத்து மீண்டும் ரஜினியை இயக்கவுள்ள இயக்குனர் ரஞ்சித் இம்முறை மும்பை டான் ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த செய்தி இன்னும் ஊர்ஜிதம் செய்யப்படாத நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க கூடாது என ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்துள்ள இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் புகழ்பெற்றவரான ஹாஜி மஸ்தான், பாரதிய மைனாரிட்டி சுரக்ஷா மகாசங்கம் என்ற கட்சியை நிறுவியவர்.

மஸ்தான் மும்பையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் என்றும் நிழல் உலக தாதா என்றும்மீடியாக்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அவர் ஒரு தேசிய அரசியல் தலைவர். அவரை கடத்தல் மன்னன் என்றும் நிழல் உலக தாதா என்றெல்லாம் சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுவரை இந்திய நீதிமன்றங்களில் கடத்தல் மற்றும் தாதா உள்ளிட்ட எந்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்படவில்லை. அப்படியிருக்கும் போது அவர் ஒரு கடத்தல் மன்னன் மற்றும் நிழல் உலக தாதா என்று அவதூறு பரப்புவது நியாயமற்றது.

நாங்கள் தமிழகத்திருந்து வந்தவர்கள் தான். நான் சிறுவனாக இருக்கும் போது என்னை தத்தெடுத்து வளர்த்து வந்தவர் அவர். என்னை, அவரது சொந்த மகன் போல் வளர்த்தார். ஆனால், என்னை மதம் மாறச் சொல்லவில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்மென்றால் அவரது வாழ்க்கை கதையை நான் தருகிறேன். அவரது வாழ்க்கை படத்தை தயாரிக்க நான் ஆவலாக இருக்கிறேன். நான் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரோடியூசர் அசோசியேசனில் வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அவருக்கு பின்னால் ஒரு பெரிய படையே இருக்கிறது. தமிழகத்தில் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாக கோபத்தில் இருக்கிறார்கள். தொடர்ந்து ஹாஜி மஸ்தான் மிர்சாவை கடத்தல் மன்னன் என்றும் நிழல் உலக தாதா என்றும் கூறி படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393