விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்தின் வசனம் கொண்டு சென்னை ரசிகர்களை குஷி படுத்திய ஹர்பஜன் சிங் ! 

 

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது. பேட்டிங்கில் முதலில் சொதப்பிய சென்னை அணி ,தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது . அதிக பட்சமாக தல தோனி 75 அடித்தார்.

அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 167 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோற்றது.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை ரசிகர்களை குஷிபடுத்த தமிழில் டிவிட் செய்துள்ளார்.அதில்,

ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க,அந்த #தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா @ IPL கப்பு கீழ @CSKfansoffical ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ CHENNAIIPL # super deluxe நன்றி சேது ஜி.

மேலும் நடிகர் விஜய்சேதுபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.