சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் நேற்றைய போட்டியில் டெல்லி அணியுடனான வெற்றிக்குப் பிறகு  மாஸான டிவிட் ஒன்றைப் போட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஞன் சிங் இந்திய அணியில் இடம்கிடைக்காமல் இருந்தாலும் இந்திய குறிப்பாக தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறார். அதற்கு முக்கியக் காரணம் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் வெற்றிக் குறித்தும், சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்கள் குறித்தும் அவர் போடும் கலகலப்பான டிவிட்களேக் காரணம்.

இதனால் இவரது டிவிட்களாக்காகவே சென்னை அணி வெற்றிப் பெற வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் நேற்று டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதை அடுத்து ஹர்பஜன் சிங் தனது வழக்கமான பாணியில் டிவிட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இந்த முறை விஸ்வாசம் படத்தின் இடைவேளையின் போது அஜித் வில்லனிடம் பேசும் மாஸான வசனத்தை மாற்றம் செய்து ‘இஞ்யார்ரா, பேரு @chennaiipl, ஊறு சென்னை, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு #தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து @IPL ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் fans! நாங்களும் தயார்! Thanks for the super support,’ எனத் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜனின் இந்த டிவிட்டை ரிடிவிட் செய்து சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.