விக்ரம் சினிமாவில் சேது படம் மூலம் ரீ எண்ட்ரீ ஆகி அவர் நடித்த தில் ,காசி என அடுத்தடுத்த அவரின் படங்கள் வெற்றி முரசு கொட்டியது இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் பிரபல மலையாள இயக்குனர் வினயன் இயக்கிய காசி திரைப்படத்தின் பாடல்கள். சரியாக 2001ம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம்.

ஏற்கனவே வினயன் மலையாளத்தில் இயக்கிய கருமாடிக்குட்டன் படத்தின் தமிழாக்கமே காசி, மலையாளத்தில் கலாபவன் மணி நடித்து இப்படம் பெரிய வெற்றி பெற்றாலும் தமிழில் இப்படத்திற்கு இசையால் உயிர் ஊட்டியவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.

இப்படத்தில் ரொமாண்டிக்,ஆக்சன் காட்சிகள் இல்லாமல் பாவப்பட்ட ஏழை பாடகனின் சோக கதை என்பதால் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பார் இயக்குனர்.

எல்லா பாடலையும் ஹரிஹரன் ஒருவருக்கே கொடுத்து வெற்றி பெற செய்தார் இளையராஜா. ஒரே ஒரு பாடலின் சில வரிகளை மட்டும் சுஜாதா பாடியிருப்பார் அதிலும் ஹரிஹரன் இணைந்து பாடி இருப்பார்.

ஹரிஹரன் ஒருவரே அனைத்து பாடல்களையும் பாடியது ஒரு பக்கம் இருந்தாலும் அனைத்து பாடல்களும் மிக பெரும் வெற்றியடைந்ததுதான் இதில் மேஜிக்.

இது போல ஒருவரே டூயட் சாங் கூட படத்தில் இல்லாமல் சோலோ பாடலாகவே பாடி வெற்றி பெற செய்வது பெரும் அதிசயம்தான்.

பெரும் ஹிட் ஆன படத்தின் பாடல்களில் கூட எல்லா பாட்டும் வெற்றியடைந்தாலும் வேறு யாராவது பல பாடகர்கள் இணைந்து பாடியிருப்பர் அல்லது எல்லா பாடலும் வெற்றியடைந்திருக்காது.

ஆனால் ஒரே ஒரு பாடகரை முழு மூச்சாக எல்லா பாடலையும் பாடவைத்து அதை வெற்றி பெற செய்த பெருமை இசைஞானியையும் தான் ஒருவரே எல்லாவற்றையும் அந்த மியூசிக்கல் ஆல்பத்தையே ஹிட்டாக்கிய பெருமை ஹரிகரனையே சேரும்.

இசையமைத்த இசைஞானி இளையராஜா, பாடிய ஹரிகரன் உட்பட இருவருமே இதில் பாராட்டுக்குரியவர்கள்.