hansika

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா தற்போது வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். அவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான ‘குலேபகாவலி’யும் ஏமாற்றிவிட்டது

இந்த நிலையில் சினிமாவில் மார்க்கெட் இழந்த பலர் சின்னத்திரையில் நடித்து வரும் நிலையில் ஹன்சிகாவுக்கும் தற்போது நெடுந்தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்

இந்த தொடரை ஒப்புக்கொண்டால் பெரிய தொகை கிடைக்கும் என்றாலும், சின்னத்திரைக்கு சென்றுவிட்டால் சினிமாவில் சான்ஸ் கிடைக்காது என்பதால் இந்த வாய்ப்பை ஏற்கலமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளாராம்.