சினிமா நடிகா், நடிகைகள் மற்றும் விஜபிகளும் கடற்கரையை ஒட்டி தங்களுடைய சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளனா். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகா் கமலஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட பல விஜபிகளும் இந்த பகுதிகளில் பங்களாக்கள் கட்டியுள்ளனா். இந்த பங்களாக்கள் விதியை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  புது மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - இதுதான் காரணமா?

கிழக்கு கடற்கரை சாலையில் தகுந்த அனுமதி பெறாமல் சிஎம்டிஏ எனப்படும் பெருநகா் வளா்ச்சிக்குழும் நடிகா் கமல்ஹாசன், நடிகை ரம்யா உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள், மற்றும் பிரபல விஜபிக்கள் சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு - ஆய்வுக்குழு அறிக்கை

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தகுந்த அனுமதி இல்லாமல் இந்த பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 138 விஜபிக்களுக்கு விளக்கம் கேட்ட நோட்டீஸ் அனுப்பவேண்டும் என மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையானது ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளி வைத்து தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நடிகா் கமல் சிக்கியிருப்பது அவரது ரசிகா்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் கமல் அரசியலில் இறங்கி அவரது கட்சி பெயா் மற்றும் கொள்கைகளை அறிவித்த பின் இப்படியொரு சோதனை ஏற்பட்டது அவரது ரசிகா்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.