பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவை செல்ல விடாமல் தடுத்தவர் இவர்தான்

 

             பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா. ஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் இடையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, ஒருவாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார்.

          அதற்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது. ஆனால் ஓவியாவின் தந்தை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புக்கட்டளை விடுத்தாராம். சின்ன வயதில் இருந்தே நான் எடுக்கும் முடிவுக்கு எந்தவித தடையும் சொல்லாத தனது தந்தை, இந்த விஷயத்தில் மட்டும் தலையிட்டு அறிவுரை கூறியதால் அவருடைய மனம் புண்படக்கூடாது என்பதற்காக நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை தவிர்த்துவிட்டேன் என்று ஓவியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

           மேலும் கடைசி ஒருவார நிகழ்ச்சியை தான் வெளியே வந்தபின்னர் பார்த்தபோது தனக்கே ஆச்சர்யமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.