கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம் தமிழில் பகல் நிலவு படம் மூலம் அறிமுகமானார் தொடர்ந்து இதயக்கோயில், மெளனராகம், நாயகன், அஞ்சலி,தளபதி ,ரோஜா, பம்பாய், அலைபாயுதே தற்போது செக்கச் சிவந்த வானம் என்று இன்றுவரை பிஸியாகவே வலம் வருகிறார்.

62 வயதை நெருங்கும் மணிரத்னம் ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் அவருக்கு சாதாரண நெஞ்சு வலி மட்டுமே இன்று அல்லது நாளைக்குள் வீட்டிற்கு திரும்பி விடுவார் அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.