விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி வெளியாகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர், பேட்ட படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்களுக்கு பதிலடியாக இருந்ததாக பேசிக்கொள்கிறார்கள். இதனா டிரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்ட, விஸ்வாசம் ஒரே நேரத்தில் வெளியாவதால் யார் பெரிய மாஸ் காட்டுவது என்பது போன்ற போட்டி நிலவுகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கட் அவுட் வைத்து வருகின்றனர்.இந்நிலையில் பிரான்சின் முக்கிய நகரில் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் மிகப்பபெரிய கட்அவுட் வைத்துள்ளனர். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட் அவுட் பிரான்சில் வைக்கப்படதில்லையாம். இதை கேள்விப்பட்டு தல ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.