தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். ஆனால், ‘மைனா’ படத்தின் மூலம்தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், இவருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து, பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலாபால்.

மேலும், திருமணத்திற்கு பின்பு கவர்ச்சியாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த வெளிவந்த ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது ‘ஆடை’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பல விமர்சனங்களை பெற்றது.

இப்படி படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் அமலாபால் அண்மையில் தனது இரண்டாவது திருமணத்தை பற்றி பேசியுள்ளார்.

இந்நிலையில், நடிகை அமலாபால் இன்ஸ்டராகாமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Bpt7sERnORA/?utm_source=ig_web_copy_link

Loading...