தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ‘வடசென்னை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் சினமா குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதே முக்கியம்.

மேலும், தற்போது இருபது சதவீத படங்கள் மட்டுமே பெண்களை மையமப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இது ஐம்பது சதவீதமாக உயர வேண்டும். திரைத்துறைக்குள் வந்த நாளில் இருந்து எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அதனால் ‘மீ டூ’ இயக்கம் பற்றி என்னால்
கருத்து கூற முடியாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் என்னை நடிக்க அழைத்தாலும் கூட சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்தார்.