மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ‘தல’ காதலி ஜோடி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் ‘ஸ்பைடர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படமான  ‘பாரத் அனே நேனு’  என்ற படத்தின் தொடங்கவுள்ளது.

டிவிவி தனய்யா தயாரிக்கும் இந்த படத்தை மகேஷ்பாபுவின் ராசியான இயக்குனரான  கொரடலா சிவா இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் இந்த படத்தின் நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணியில் முழுவீச்சில் உள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தின் தோனியின் காதலியாகவும் மனைவியாகவும் நடித்த கியரா அத்வானி, மகேஷ்பாபுவின் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.