‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வரலட்மி சரத்குமார். ‘மதகஜராஜா’. ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருப்பினும் ‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு இவர் ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கிறார். ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிப்பிற்கு பிறகு வரலட்சுமிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு ஒரு மனவருத்தம் உள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, எல்லா படங்களிலும் 2வது ஹீரோயினாக அல்லது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே தன்னை அழைப்பதாகவும், தனிக் கதாநாயகி பட வாய்ப்பு குறைவாகவே வருவதாகவும் தெரிவித்தார். எனவே, இனி வரும் படங்களில் தனக்கான கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தனி கதாநாயகியாக நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.