Tiruchangodu – நடிகைகள் காணாமல் போனால்தான் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செங்கோட்டை சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். எனவே, இதுபற்றி போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். ஆனால், அப்பெண்ணை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  காதலருடன் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா - வைரல் புகைப்படங்கள்

எனவே, தனது மகளை தேடிக்கண்டுபிடித்து ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிடும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மகேஸ்வரி மனு அளித்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாதாரண மக்கள் அளிக்கும் புகார்களுக்கு போலீசார் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதுவே போலீசார் வீட்டுப் பெண்கள் காணாமல் போயிருந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பார்களா? அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என நீதிபதி பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தின் விசுவாசம் தீபாவளிக்கா? பொங்கலுக்கா?

மேலும், காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.