என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்

பிரபல மலையாள நடிகை பாலியல் தொந்தரவை அடுத்து கேரள திரையுலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன. அங்கு மிகப்பெரிய அமைப்பான அம்மாவுக்கு எதிராக நடிகைகள் ஒரு அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பை தொடங்கியதும் நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மலையாள படஉலகில் இளம் நடிகையான ஹிமா சங்கர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற ஒரு பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஹிமா சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,

நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே வாய்ப்புகள் வந்தன. இது தொடர்பாக 2 பேர் என்னை சந்தித்தனர். அப்போது படுக்கையை பகிர்வதற்கு தயார் என்றால்  நடிக்க வாய்ப்பு என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றனர். அவர்களின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்படிப்பட்ட வாய்ப்பே எனக்கு தேவையில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Previous articleபிக்பாஸ் வீட்டில் நானா?-ப்ரியா சங்கர் விளக்கம்
Next articleசுதந்திர தினத்திற்காக தங்கத்தில் உருவான ‘தங்கல்’ கேக்
இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com