120 கோடிக்கு வாங்கி 400 கோடி லாபம் பார்த்த கரண்

எந்தவொரு தொழில் செய்தாலும் அதில் எவ்வளவு முதலீடு போடுகிறோமோ அதைப் பொறுத்து தான் வருமானம் அமையும். முதலீடு செய்ததை விட வருமானம் அதிகளவில் இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாங்க!! அந்தளவுக்கு லாபம் கிடைத்த பிசினஸ் எப்படி இருக்கும். அது தான் தற்போது நடந்துள்ளது. பாகுபலி 2 படத்தின் ஹிந்தி டப்பங்கில் கிடைத்துள்ளது. இது இந்திய திரையுலகத்திற்கு இதுவரை இப்படியொரு வருவாய் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

பிரபல இயக்குரான கரண் ஜோஹா் பாகுபலி 2 படத்தின் ஹிந்தி டப்பிங்கை கிட்டத்தட்ட 120 கோடி கொடுத்து வாங்கினாா். ஆனா நடந்தது என்னவென்றால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் மட்டும் இந்த படம் ஹிந்தியில் 400 கோடி ரூபாய் வசூலை அள்ளி கொட்டி இருப்பதாக பாலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கான விளம்பரம் மற்றும் இதர செலவுகள் 80 கோடி என்று வைத்து கொண்டாலும் படத்தை வாங்கி வெளியிட்டதன் மூலம் இயக்குரான கரண் ஜோஹா் மட்டும் கிட்டத்தட்ட 200 கோடி வரை லாபத்தை சம்பாதித்துள்ளாா் என்று ஆச்சாியமான செய்தியை அளித்துள்ளது பாலிவுட் வட்டாரம்.

பாகுபலி 2 நேரடி தெலுங்கு படம். நேரடியாக அந்த மொழியில் எடுக்கபட்டு இந்த படமானது அந்த மொழியில் இந்தளவுக்கு வருவாய்யை அள்ளி கொடுத்திருக்குமா என்பது ஆச்சாியக்குறியாக தான் இருக்கும். ஆனா, டப் செய்யப்பட்டு ஹிந்தியில் இவ்வளவு லாபத்தை அள்ளி கொடுத்திருப்பது வியப்பான விஷயம் தான். இப்படியொரு டப்பிங் மொழி படம் இந்தளவுக்கு லாபத்தை வாாி வழங்கியிருப்பது இது வரை நடக்காத செய்தி தான். வரலாறு படைத்துள்ளது பாகுபலி 2.

இப்படி வாாி வழங்கியுள்ள பாகுபலி 2 படமானது இன்னும் என்ன என்ன சாதனைகளை நிகழ்த்த உள்ளதோ என்று பாலிவுட்ல் பொறுத்திருந்து பாா்க்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.