பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஏற்கனவே ஹீரோவாக நடித்த ‘மீசையை முறுக்கு’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஹாக்கி வீரராக நடிக்கவுள்ளாராம். இந்த நிலையில் காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்திலும் ஒரு படத்தில் ஆதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திலும் ஆதி, வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது