ஹட்ரிக் வெற்றிக்கு தயாராகிறார் விஜய்சேதுபதி !

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்கள் பலர் இருந்தாலும் , விஜய் சேதுபதிகென்று  ஒரு தனி மவுசு வந்துவிட்டது , கரணம் சமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டிருக்கும் ‘விக்ரம் வேதா’ திரைப்படம். மாதவனும் விஜய்சேதுபதியும் போட்டி போட்டுகொண்டு மாஸ் காட்டியுள்ளனர் இப்படத்தில். விஜய்சேதுபதிக்கு பெரிய அளவில் மதிப்பையும் ரசிகர்களையும் கூடியுள்ளது இந்த படம்.

இதையடுத்து விஜய்சேதுபதி நடித்துள்ள ‘புரியாத புதிர்’, ‘கருப்பன்’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்த வார இடைவேளையில் வெளியாக உள்ளன. ஏற்கனவே ‘பீட்சா’ , ‘கவண்’ போன்ற படங்களில் தோன்றிய யூத் கதாபாத்திரத்தில்தான் “புரியாத புதிர் ‘ திரைப்படத்திலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஆனால் மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது கருப்பன் திரைப்பதிற்கு, ஏனென்றால் இதில் ஜல்லிக்கட்டு வீரனாக, ஒரு கிராமத்து  இளைஞனனாக  நடித்துள்ளார் நம்ம மாஸ் ஹீரோ விஜய்சேதுபதி.  தன்யா ஹீரோயினாகவும் , பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தை பன்னேர்செல்வம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்  ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழக உரிமையை பிக்சர் போஸ் கம்பெனி பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளனர்.

மாஸ் ஹீரோக்களையே கதிகலங்க வைக்கும் விஜய்சேதுபதிக்கு இது மீண்டும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.