சீயான் விக்ரம் நடிக்கவுள்ள ரூ.300 கோடி பட்ஜெட் திரைப்படம் ‘மகாவீர் கர்ணன்’. இந்த படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் பீமன் கேரக்டரில் நடிக்க ஹாலிவுட் நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது விபரம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குனர் விமல் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதைக்காக கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும், தன்னுடைய திரைக்கதை மற்றும் ஆய்வுகளை பார்த்தபின்னரே விக்ரம் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் இயக்குனர் விமல் தெரிவித்துள்ளார்.

மேலும் வருடம் அக்டோபர் மாதம் ஷூட்டிங் தொடங்குவதாகவும், அடுத்த வருடம் டிசம்பரில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய விமல், இந்த படத்தின் படப்பிடிப்பு கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி, ஜெய்ப்பூர் உட்பட பல இடங்களில் நடக்க இருப்பதாகவும், இந்தியில் உருவாகும் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படும்’ என்றும் இயக்குனர் விமல் தெரிவித்துள்ளார்.