விவேகம்’ படத்தில் ஹாலிவுட் நடிகை: வெளிவராத தகவல்

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது தெரிந்ததே

ஆனால் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஜேம்ஸ்பாண்ட் நாயகன் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவர், இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் சற்று முன் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்

உண்மையான சர்வதேச தரத்தில் அமைந்துள்ள இந்த படம் ‘பாகுபலி 2’ படத்திற்கு பின்னர் உலகமே தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.