கோலிவுட் திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களின் பாதுகாப்பிற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார், சேவ் சக்தி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார். இந்த அமைப்பின் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரலட்சுமி ஆரம்பித்தது போலவே ஹாலிவுட் நடிகைகள் இணைந்து அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பு நடிகைகள், உள்பட பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் ஹாலிவுட் நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு தமிழ் நடிகையின் ஆலோசனை ஹாலிவுட்டிலும் பின்பற்றப்படுவது நமக்கெல்லாம் பெருமைதான் என்பது குறிப்பிடத்தக்கது.