ஹாலிவுட்டில் தயாராகியுள்ள ‘மௌக்லி: லெஜெண்ட் ஆஃப் தி ஜங்கிள்’ திரைப்படமானது, ருட்யார்ட் கிளிப்பிங் எழுதிய சிறுகதைகளை மையாக வைத்து உருவாக்கப்பட்டது. இப்படத்தில் ‘மௌக்லி’ கதாபாத்திரத்தில் ரோஹன் சந்த் நடித்துள்ளார்.

அண்டி செர்கிஸ் இயக்கியுள்ள இப்படமானது ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய ரோலுக்கு ஹிந்தியில் அபிஷேக் பச்சன், கரீனா கபூர், மாதுரி திகஷித், அணில் கபூர், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி மொழியில் டியெர்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நெட்பிளிக்ஸ் என்ற இணையதளத்தில் வெளியாகும் என தெரியவருகிறது. ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.