நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர்பான புகார்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஹாலிவுட்  மட்டுமின்றி பாலிவுட், மலையாள திரையுலகம், மற்றும் தெலுங்கைச் சேர்ந்த நடிகைகள் இது குறித்து பரபரப்பு புகார்கள் தைரியமாக  கூறுகின்றனர். சமீபகாலமாக ஸ்ரீரெட்டி பல குற்றச்சாட்டுகளை ஆதாரங்களீடன் கூறிவருவது அனைவருக்கும் தெரிந்ததே.சரி விசயத்திற்கு
வருவோம்.

சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஹனிரோஸ். தொடர்ந்து கார்ந்தர்வன்,மல்லுக்கட்டு உள்ளிடட் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவர் பாலியல் தொல்லை குறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், மலையாள பட உலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் நாம் திடமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிக்க வந்த புதிதில் புதுமுக நடிகைகளுக்கு இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் சூழ்நிலை வரும் என கூறினார்.

ஆரம்ப காலங்களில் எனக்கும் இந்த சூழ் நிலை ஏற்பட்டது. பலர் மூளை சலவை செய்தனர்.ஆனல் என்னுடைய கொள்கையில் நான் உறுதியாக இருந்ததால் எந்த பிரச்னைகளும் எனக்கு ஏற்படவில்லை என்று கூறினார். ஹனிரோஸின் இந்த பேட்டி மலையாள  திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.