Cellphone affect – செல்போனை அதிக நேரம் குனிந்து கொண்டே பயன்படுத்தினால் தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கொம்பு போன்ற ஒரு கூர்மையான எழும்பு வளரும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. பேசுவது, வீடியோ கால் பேசுவது, புகைப்படம், வீடியோ பகிர பயன்படுத்தப்பட்ட செல்போன் தற்போது அத்தியாவசியப் பொருளாக மாறிப்போனது. பலரும் அதை தங்களின் பணி மற்றும் தொழில்ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பலரும் பெரும்பாலான நேரங்களில் குனிந்து கொண்டு செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இது உடல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு செய்து சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

செல்போனை அதிக நேரம் குனிந்த படியே பயன்படுத்தினால் தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, குனிந்த படியே அதிக நேரம் செல்போனில் மூழ்கும் போது தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது. இதனால் தசை நாண்கள், தசை நார்கள் வளர்கிறது. இதன் காரணமாக தலையின் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.