abirami

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்பவர் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் அபிராமி குழந்தைகளை கொல்ல பயன்படுத்தியது தூக்க மாத்திரை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பிரியாணி கடையில் வேலை பார்த்த சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட அபிராமி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை கொல்ல திட்டமிட்டார். ஆனால் கணவன் அபிராமி வீசிய வலையில் சிக்காமல் எதிர்பாராத விதமாக தப்பினார். ஆனால் பரிதாபமாக இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டது.

இதனையடுத்து தப்பியோடிய இந்த கள்ளக்காதல் ஜோடியை நாகர்கோவிலில் வைத்து கைது செய்த போலீசார் சென்னை கொண்டு வந்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதனையடுத்து குழந்தைகளை கொல்ல தூக்க மாத்திரை எப்படி கிடைத்தது என போலீசார் அபிராமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை எனவும் மாதவிடாய் காலகட்டத்தில் பயன்படுத்தும் மாத்திரைகள் எனவும் கூறியுள்ளார் அபிராமி. தன்னிடம் ஐந்து மாத்திரைகள் இருந்ததாகவும், அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்து பாலில் அதை கலந்ததாக கூறியுள்ளார்.