Tamilnadu Polytics – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்களை ஒன்றிணைக்கும் பணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டிருப்பது பழனிச்சாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரான தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனதற்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் அவரின் வலது கரங்களில் ஒருவரான கொங்கு மண்டல அமைச்சரும் ஒருவருமே காரணம் என ஓ.பி.எஸ் உறுதியாக நம்புகிறாராம். இதனால் கடும் அதிருப்தி மற்றும் கோபத்தில் இருக்கும் ஓபிஎஸ் மீண்டும் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என கருதுகிறராம். இதன் தொடர்ச்சியாக பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்களை அவர் தொடர்ந்து சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கமலுக்கு பதில் கொடுத்து மாட்டிக் கொண்ட மோடி - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

தற்போதைக்கு ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி உள்ளிட்டவர்கள் பன்னீருக்கு ஆதரவுக்கு உள்ளனர். இதேபோல் இன்னும் சிலர் அவர் பக்கம் வருவார்கள் எனத் தெரிகிறது. ஏனெனில், பணம் கொழிக்கும் முக்கிய துறைகளை எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி போன்ற கொங்கு அமைச்சர்கள் வைத்துக்கொண்டு மற்றவர்களுகு ஒன்றுமில்லாத துறைகளை ஒதுக்கிவிட்டதாக ஒரு புகைச்சல் அதிமுக அமைச்சர்களிடையே புகைந்து வருகிறது.

டெல்லியில், ஓ.பி.எஸ் தனது பலத்தை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அவரின் மகன் ரவீந்திரநாத்குமருக்கு பதவி கிடைக்காமல் எடப்பாடி சதி செய்து விட்டதாக ஓ.பி.எஸ் கருதுகிறார். எனவே, எப்படியாவது டெல்லியில் தன் செல்வாக்கை பயன்படுத்தி முதல்வர் பதவியில் மீண்டும் அமர வேண்டும் என அவர் விரும்புவதாக தெரிகிறது. இதற்காகவே தனக்கான அணியை அவர் வலுப்படுத்த துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  துரைமுருகனுக்கு போன் போட்டு மொக்கை வாங்கிய சுதீஷ்!

ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை எப்படியாவது கலைக்க திமுக காய் நகர்த்தி வருகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி விட்டால் அது மேலும் சிக்கல் ஆக்கிவிடும் என எடப்படி கருதுகிறாராம்.

இதுபோக, அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா களம் இறங்கி பரபரப்பு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், ஒரு பக்கன் தினகரன், மறுபக்கம் ஸ்டாலின், இதுபோக கட்சிக்குள் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என பலரும் தனக்கு எதிராக காய் நகர்த்துவதால் எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் இருக்கிறார். இதன் விளைவாகவே அதிமுக சார்பில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இன்பார் நோன்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. பல் வலி என காரணம் கூறப்பட்டது. ஆனால், அதே நாளில் சில எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர் பேசியதாக அப்போதே தகவல் வெளியானது.

இதையும் படிங்க பாஸ்-  தேர்தல் வரும்போது தெரியும்: அழகிரி ரீஎண்ட்ரி; குழப்பத்தில் திமுக!

சமீபத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய அவர், இந்த ஆட்சியை தொடர்ந்து நடத்த ஆதரவாய் இருங்கள். அப்போதுதான் உங்கள் கோரிக்கைகளை என்னால் நிறைவேற்ற முடியும் என மன்றாடியிருக்கிறார்.

இன்னும் 2 வருடங்கள் ஆட்சியை நகர்த்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன.